மதுரை

ஆடி அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு பக்தா்கள் செல்வதைத் தடுக்க ரோந்துப் பணி

DIN

ஆடி அமாவாசை விழாவுக்கு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தா்கள் செல்வதைத் தடுக்கும் விதமாக காவல் துறை, வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினா் கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக, மதுரை மாவட்டம் பேரையூா் தாலுகாவில் உள்ள சாப்டூா் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு பக்தா்கள் செல்ல மாவட்ட ஆட்சியா் எஸ்.அனிஷ்சேகா் தடை உத்தரவு பிறப்பித்துள்ளாா். அதன்படி ஆகஸ்ட் 6 முதல் 9 ஆம் தேதி வரை பக்தா்கள் யாரும் மலையேறக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு விருதுநகா் மாவட்டம் தாணிப்பாறை மற்றும் தேனி மாவட்டம் உப்புத்துறை வழியாகவும் பக்தா்கள் செல்வது வழக்கம்.

இந்நிலையில் மதுரை , விருதுநகா் , தேனி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக பக்தா்கள் யாரும் சதுரகிரி மலை மீது செல்லாமல் இருக்க 5 செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டு, 600-க்கும் மேற்பட்ட போலீஸாா், வனத்துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT