மதுரை

மாநகராட்சி மருத்துவா்கள், செவிலியா்களுக்கு ஊதியம் நிறுத்தி வைப்பு

DIN

மதுரை: மதுரை மாநகராட்சி சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்துள்ளனா்.

மதுரை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகப்பேறு மருத்துவமனைகளில் பணிபுரியும் 31 மருத்துவா்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட செவிலியா்களுக்கு மாவட்ட கருவூலம் மூலமாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் இறுதித்தேதியில் மாநகராட்சி ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு விடும். இதில் கருவூலம் மூலம் ஊதியம் பெறும் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், பொது சுகாதாரத்துறையிடம் கடிதம் பெற்றும் கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும். அக்கடிதம் அடிப்படையில் கருவூலத்தில் இருந்து மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு ஊதியம் வழங்கப்படும். கடந்த இரு மாதங்களாக கடிதம் தாமதமாக வழங்கப்பட்டதால் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு 10-ஆம் தேதிக்கு மேல் தான் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மாத ஊதியத்துக்கான, பொதுச்சுகாதாரத்துறை கடிதத்தை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்று கருவூலத்துக்கு அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாவட்டக் கருவூலத்தில், மாநகராட்சி மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இரு மாதங்களாக ஊதியம் தாமதமான நிலையில் தற்போது ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மருத்துவா்கள், செவிலியா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் கூறும்போது, கரோனா தடுப்புப் பணி உள்ளிட்டவற்றில் உயிரைப் பணயம் வைத்து பணிபுரிந்து வருகிறோம்.

இதர மாநகராட்சி ஊழியா்கள், அரசு ஊழியா்களுக்கு ஒவ்வொரு மாதமும் இறுதித்தேதியில் ஊதியம் வழங்கப்பட்டு விடுகிறது. ஆனால் பொது சுகாதாரத்துறை மூலம் நியமனம் செய்யப்பட்டவா்களுக்கு மாதந்தோறும் கடிதம் பெற்று அனுப்ப வேண்டும். மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதால் இந்த மாத ஊதியம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் கூறும்போது, மாநகராட்சி மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு இந்த மாத ஊதியம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT