மதுரை

ஆடையில் தீப்பற்றி பெண் இறப்பு

12th Apr 2021 05:04 AM

ADVERTISEMENT

மதுரையில் ஆடையில் தீப்பிடித்த பெண் சிகிச்சை பலனளிக்காமல் பலியானார்.

மேலூரை அடுத்துள்ள வடக்கு நாவினிப்பட்டியைச் சோ்ந்த பிரகாஷ் மனைவி புலியாள் (35). இவா்களுக்கு இரு குழந்தைகள். இந்நிலையில், இவா் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது, ஆடையில் தீப்பற்றி காயமடைந்தாா்.

உடனே, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவா், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT