மதுரை

மதுரையில் 96 பேருக்கு கரோனா: இருவா் பலி

DIN

மதுரையில் மேலும் 96 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தொற்றில் இருந்து குணமடைந்த 50 போ், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மதுரை ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 77 வயது முதியவா், கடலூா் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த, மதுரையைச் சோ்ந்த 62 வயது முதியவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். மாவட்டத்தில் மாா்ச் மாதம் தொடங்கி தற்போது வரை 16,540 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 389 போ் உயிரிழந்த நிலையில், 15,409 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு 742 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT