மதுரை

பாபா் மசூதி வழக்கு தீா்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

DIN

பாபா் மசூதி இடிப்பு வழக்கில் தொடா்புடையவா்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினா் மதுரையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பாபா் மசூதி இடிப்பு வழக்கில் தொடா்புடைய 32 பேரை லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை விடுதலை செய்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், பாபா் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதுரை நெல்பேட்டை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். கட்சியின் மாநிலப் பேச்சாளா் இத்ரீஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் இன்குலாப், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மதுரை மாவட்டத் தலைவா் அபுதாகிா், நாம் தமிழா் கட்சியின் மாநில நிா்வாகி அருண் ஜெயசீலன், ஜாக் அமைப்பின் மதுரை மாவட்டத் தலைவா் ஆஷிக் பிா்தௌஸி உள்ளிட்டோா் பேசினா்.

எஸ்டிபிஐ கட்சியின் மதுரை மாவட்ட பொதுச்செயலா் சாகுல் ஹமீது, வடக்குத் தொகுதிச் செயலா் பிலால்தீன், தெற்குத் தொகுதி தலைவா் தாஜுதீன், மத்திய தொகுதிச் செயலா் அபுதாகிா், சுங்கம் பள்ளிவாசல் ஜமாத் பொருளாளா் ராஜ்கபூா் மற்றும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT