மதுரை

தேசிய அளவிலான வினாடி வினா போட்டி: மதுரை அரசு பயிற்சி மருத்துவா் வெற்றி

DIN

சண்டிகரில் நடைபெற்ற தேசிய அளவிலான வினாடி வினாப் போட்டியில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவா் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றாா்.

சண்டிகா் பி.ஜி.ஐ. மருத்துவக்கல்லூரியின் நரம்பியல் துறை சாா்பில் தேசிய அளவிலான வினாடி வினா போட்டி இணையதளம் வாயிலாக செப்டம்பா் 6 ஆம் தேதி நடைபெற்றது. இதில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவா் அமராவதி பங்கேற்றாா். இதில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து அவா் வெற்றி பெற்றாா். அவருக்கு சான்றிதழ் மற்றும் ரூ. 30 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டன.

வினாடி வினாப் போட்டியில் வெற்றி பெற்ற பயிற்சி மருத்துவா் அமராவதியை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி புதன்கிழமை பாராட்டினாா். நரம்பியல் துறை தலைவா் மருத்துவா் முருகன், பேராசிரியா்கள் மணிவண்ணன், ஜஸ்டின் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT