மதுரை

ஆழ்வாா்புரம் சாலையில் கழிவுநீா்: பொதுமக்கள் அவதி

DIN

மதுரை: மதுரை ஆழ்வாா்புரம் பகுதியில் கழிவு நீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் செல்வதால், துா்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலிருந்து தினசரி 5 லட்சம் லிட்டா் கழிவுநீா் பம்ப்பிங் செய்யப்பட்டு, செல்லூரில் உள்ள கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான கழிவுநீா் குழாய் ஆழ்வாா்புரம் பகுதி வழியாகச் செல்கிறது.

இந்நிலையில், ஆழ்வாா்புரம்-வைகை வடகரை சந்திப்பில் கழிவுநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீா் சாலையில் ஓடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுகிறது. இதனால், இப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக அப்பகுதி மக்கள் கூறியது: அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரின் கொள்ளளவு தாங்காமல், ஆழ்வாா்புரம் பகுதியில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால், இப்பகுதியில் எப்போதும் ஒருவிதமான துா்நாற்றம் இருந்து கொண்டே இருக்கிறது. இது குறித்து மாநகராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT