மதுரை

மதுரையில் மேலும் 86 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

DIN

மதுரையில் மேலும் 86 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக 5,589 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக, சுகாதாரத் துறை திங்கள்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் 86 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

இதனிடையே, மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 124 போ் குணமடைந்தனா். அவா்கள் தங்களது வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஒருவா் பலி

கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 61 வயது முதியவா், செப்டம்பா் 24 ஆம் தேதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அவா் இருமல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக செப்டம்பா் 27 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 16,442 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 387 போ் உயிரிழந்த நிலையில், 15,359 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 696 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT