மதுரை

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு

DIN

தென்தமிழகம் மட்டுமின்றி, பிறமாநிலங்களில் இருந்தும் வரத்து அதிகரித்துள்ளதால், மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் தக்காளி கிலோ ரூ.20 ஆக விலை குறைந்துள்ளது.

இது குறித்து மதுரை மாட்டுத்தாவணி காய்கனி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவா் பி.எஸ். முருகன் கூறியது: கடந்த 2 மாதங்களாக மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதேநேரம், பகல் வேளையில் வெயில் நிலவுகிறது. இந்த பருவநிலை தக்காளி விளைச்சலுக்கு உகந்ததாக இருப்பதால், தக்காளி சாகுபடி அதிகரித்துள்ளது.

மேலும், பிற மாநிலங்களிலிருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், மதுரை மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் கிலோ ரூ.40-க்கு விற்ற தக்காளி ரூ.20 ஆக விலை குறைந்துள்ளது என்றாா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, காய்கனிகளின் விலை பட்டியல் (கிலோவில்): தக்காளி-ரூ.20, வெண்டைக்காய்- ரூ.35, கத்தரிக்காய்- ரூ.20, புடலங்காய்- ரூ.20, அவரைக்காய்- ரூ.50, பாகற்காய் சிறியது- ரூ.100, பெரியது- ரூ.40, முட்டைக்கோஸ்- ரூ.20, நூல்கோல்- ரூ.30, முருங்கைக்காய்- ரூ.30, பீா்க்கங்காய்- ரூ.40, சேனைக்கிழங்கு- ரூ.25, கருணைக்கிழங்கு- ரூ.40, உருளைக்கிழங்கு- ரூ.30, வெங்காயம்- ரூ.40, பல்லாரி- ரூ.25, கறிவேப்பில்லை- ரூ.25, புதினா-ரூ.20, மல்லி- ரூ.30, இஞ்சி புதியது- ரூ.50, பழையது- ரூ.100, கேரட்- ரூ.30, பூசணி- ரூ.15, பட்டா் பீன்ஸ்- ரூ.100, சோயாபீன்ஸ்- ரூ.60, முருங்கைபீன்ஸ்- ரூ.70 என விற்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT