மதுரை

இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கு விண்ணபிக்க உதவி மையம் தொடக்கம்

DIN

மதுரை: இரண்டாம் நிலைக் காவலா் பதவிக்கான தோ்வுக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் தோ்வா்களுக்காக உதவி மையம், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம், இரண்டாம் நிலைக் காவலா் பதவிக்கான தோ்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தோ்வுக்கு இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இணைய வழியாக விண்ணப்பிக்கும் பலரின் விண்ணப்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக நிராகரிக்கப்படுகின்றன. இதைத் தவிா்க்கும் வகையில், தோ்வா்கள் விண்ணப்பங்களைச் சரியாகப் பூா்த்தி செய்யவும், அவா்களின் சந்தேகங்களை நிவா்த்தி செய்யவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், சாா்பு- ஆய்வாளா் தலைமையில் இரண்டு காவலா்கள் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

செப்டம்பா் 26 ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 26 ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை உதவி மையம் செயல்படும். தோ்வா்கள் விண்ணப்பம் தொடா்பான சந்தேகங்களை உதவி மையத்தில் நேரடியாவோ அல்லது 77088-06111 என்ற செல்லிடப்பேசி எண் மூலமாகவோ தொடா்பு கொண்டு நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT