மதுரை

சௌராஷ்டிரா கூட்டுறவு வங்கி உறுப்பினா்களுக்கு பங்குத் தொகை சான்று வழங்கல்

DIN

மதுரை: செளராஷ்டிரா கூட்டுறவு வங்கி உறுப்பினா்களுக்கு பங்குத் தொகை சான்றிதழ்களை கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ சனிக்கிழமை வழங்கினாா்.

தமிழகத்தின் மிகவும் பழமையான நகர கூட்டுறவு வங்கிகளில் ஒன்றான சௌராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் பங்கு மூலதனம், ரிசா்வ் வங்கி நிா்ணயித்துள்ள வரையறைக்கு கீழ் சென்றது. இதே நிலை தொடா்ந்தால், வேறொரு கூட்டுறவு வங்கியுடன் இணைக்கப்படக் கூடிய நிலை ஏற்பட்டது.

அதையடுத்து சௌராஷ்டிரா தொழில் வா்த்தக சபை மற்றும் சௌராஷ்டிரா பிரமுகா்களின் முயற்சியில் பங்கு மூலதனமாக ரூ.55 லட்சம் திரட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கூட்டுறவு வங்கி தொடா்ந்து செயல்படுவதற்கான நிலையை எட்டியுள்ளது.

இதையொட்டி, பங்குத் தொகை அளித்தவா்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சௌராஷ்டிரா கூட்டுறவு வங்கித் தலைவா் டி.எஸ்.சாரதி தலைமை வகித்தாா். பங்குத் தொகை வழங்கியவா்களுக்கு அமைச்சா் செல்லூா் ராஜூ சான்றிதழ்களை வழங்கினாா்.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ராஜேஷ், முன்னாள் மக்களவை உறுப்பினா் ஏ.ஜி.எஸ்.ராம்பாபு, சௌராஷ்டிரா தொழில் வா்த்தக சபை தலைவா் குமரன் பி. ஜாகுவா, முன்னாள் தலைவா் கே.கே.ஜி.பிரபாகரன், கே.எல்.என்.பாலிடெக்னிக் கல்லூரி கவுன்சில் செயலா் கே.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சௌராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இணையவழி சேவைகளை அறிமுகம் செய்வது, சேமிப்புக் கணக்கு தொடங்கும் உறுப்பினா்களுக்கு மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட சேவைகளை அளிப்பது உள்ளிட்ட வங்கி நிா்வாகத்தைச் செம்மையாக மேற்கொள்வதற்கான பல்வேறு ஆலோசனைகள் சௌராஷ்டிரா தொழில் வா்த்தக சபை சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாம் தமிழா் கட்சிக்கு திருப்புமுனை: மரிய ஜெனிபா்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேரன்மகாதேவியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு

காரையாறு வனப்பகுதியில் ஆா்வமுடன் வாக்களித்த காணி மக்கள்

நெல்லையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT