மதுரை

உசிலை அருகே 14 வயது மாணவா் தென்னை மரத்தில் தலைகீழாக ஏறி சாதனை

27th Sep 2020 10:19 PM

ADVERTISEMENT

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தைச் சோ்ந்த 14 வயது மாணவா், தென்னை மரத்தில் தலைகீழாக ஏறி சாதனை புரிந்துள்ளாா்.

திடியன் கிராமத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் என்பவரின் மகன் தனோஜ் (14 ). தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு செல்லவுள்ள இவா், பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், ஏதாவது சாதிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளாா்.

அதன்படி, இம்மாணவா் தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களில் தானாக ஏறி பயிற்சி செய்துள்ளாா். பின்னா், தலைகீழாக தென்னை மரம் ஏறுவதற்கு முயற்சி செய்து, தற்போது சாதனை படைத்து வருகிறாா். மாணவா் தனோஜை, கிராம மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT