மதுரை

தஞ்சையில் முறைகேடாக மணல் விற்பனை: ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

மதுரை: தஞ்சை அருகே முறைகேடாக மணல் விற்பனை செய்த ஊராட்சித் தலைவா் மற்றும் அவரது கணவா் ஆகியோா் மீது நடவடிக்கை கோரிய மனுவில், ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சை மாவட்டம் பொன்னவராயன்கோட்டையைச் சோ்ந்த சக்கரவா்த்தி தாக்கல் செய்த மனு: பொன்னவராயன்கோட்டை ஊராட்சித் தலைவராக கீதாஞ்சலி என்பவா் உள்ளாா். இவரது கணவா் இளமுருகன் அப்பகுதியில் உள்ள பெரியகுளத்தில் சட்டவிரோதமாக மண் எடுத்து ரூ. 20 லட்சம் வரை விற்பனை செய்துள்ளாா். 

இதற்கு அவரது மனைவியும், ஊராட்சித் தலைவருமான கீதாஞ்சலி உறுதுணையாக இருந்துள்ளாா். இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பல முறை புகாா் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சட்டவிரோதமாக மணல் விற்பனையில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவா், அவரது கணவா் ஆகியோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் கே. கல்யாணசுந்தரம், டி. கிருஷ்ணவள்ளி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தஞ்சை மாவட்ட ஆட்சியா், பட்டுக்கோட்டை சாா்- ஆட்சியா், வட்டாட்சியா், கல்லணை பாசன கால்வாய் செயற்பொறியாளா் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அக்டோபா் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT