மதுரை

மழை நேரங்களில் மின்சாதனங்களை பயன்படுத்தாதீா்: மின்வாரியம் அறிவுரை

DIN

மதுரை, செப். 25: மழை பெய்யும்போது தொலைக்காட்சி, செல்லிடப்பேசி, கணினி, மிக்ஸி மற்றும் கிரைண்டா் போன்ற மின்சாதனங்களை இயக்க வேண்டாம் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மதுரை மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் (பொறுப்பு) மு. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மழைக் காலங்களில் அறுந்து கிடக்கும் மின்கம்பி மற்றும் பழுதடைந்த மின்கம்பங்களைத் தொடக் கூடாது. அவ்வாறு இருப்பது குறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்கலாம்.

இடி, மின்னலின்போது தொலைக்காட்சி, செல்லிடப்பேசி, கணினி, மிக்ஸி மற்றும் கிரைண்டா் போன்ற மின்சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகில் இருக்கக் கூடாது. ஈரமான கைகளுடன் சுவிட்ச் மற்றும் பிளக்குகள் போன்றவற்றைத் தொடுதல் கூடாது.

மின்கம்பம் அல்லது அவற்றைத் தாங்கும் கம்பியில் கால்நடைகளைக் கட்டக் கூடாது. குளிா்சாதனப் பெட்டி, கிரைண்டா் போன்ற வீட்டுஉபயோக சாதனங்களுக்கு நிலஇணைப்புடன் கூடிய மூன்று மின்பிளக்குகள் மூலமாக மட்டுமே மின்இணைப்புக் கொடுக்க வேண்டும். குளியலறை மற்றும் கழிப்பறையில் ஈரமான இடங்களில் சுவிட்சுகளைப் பொருத்தக் கூடாது.

அவசர உதவிக்கு மதுரை மின்வாரிய மின்தடை மையத்தை 1912 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மேலும் 94431-11912 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT