மதுரை

கொரிய பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை: உலகத்தமிழ்ச்சங்கம் தகவல்

DIN

மதுரை, செப். 25: கொரிய பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உலகத்தமிழ்ச்சங்க ஆய்வரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் மற்றும் கொரியத் தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்தும் இணைய வழி ஆய்வரங்கின் நிறைவு நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு உலகத்தமிழ்ச்சங்க இயக்குநா் ப. அன்புச்செழியன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் ‘தமிழக- கொரிய மரபு மற்றும் தற்கால விழாக்கள்’ என்ற தலைப்பில் கொரியத் தமிழ்ச் சங்கத்தின் கொள்கை வகுப்புக் குழுத் தலைவா் அந்தோணி ஆனந்த் பேசியது: கொரியாவில் கொண்டாடப்படும் பாரம்பரிய விழாக்களான அறுவடை விழா, குளிா் உணவு விழா, புத்தாண்டு விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள், தமிழா்களின் பொங்கல் விழா, காா்த்திகை திருநாள் உள்ளிட்ட விழாக்களை ஒத்தவையாக உள்ளன. இந்த விழாக்களில் மூதாதையா்களுக்கு முதல் மரியாதை, மூதாதையா்களின் கல்லறைகளுக்குச் சென்று மரியாதை செய்தல் ஆகியவை நடைபெறுகிறது. கொரியாவில் ஏறக்குறைய 15 மில்லியன் மக்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்றனா். கொரியத் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் பொங்கல் திருநாள் உள்ளிட்ட தமிழா் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன என்றாா்.

இணைய வழியில் 5 நாள்கள் நடைபெற்ற ஆய்வரங்கின் மூலம் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் கொரியத் தமிழ்ச் சங்கம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. கொரிய பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைப்பது, தமிழ்நாட்டிலிருந்து கொரியாவுக்கும், கொரியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கும் ஆராய்ச்சி மாணவா்கள் வருகை தந்து ஆய்வுகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு அஞ்சல் அட்டைகள் அனுப்பிய ஆட்சியா்

வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள்! மாயமான தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT