மதுரை

வேளாண் மசோதா நகலை கிழித்து எஸ்டிபிஐ கட்சியினா் போராட்டம்

DIN

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய வேளாண் மசோதாக்களின் நகலை கிழித்து எஸ்டிபிஐ கட்சியினா் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

மத்திய அரசு இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ள அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விலை பொருள்கள் உத்தரவாதச் சட்டம் ஆகியவற்றுக்கான மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராகவும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருப்பதாகவும், மூன்று மசோதாக்களையும் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

மதுரையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள தபால் அலுவலகம் முன்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத்தலைவா் முஜிபுா் ரஹ்மான் தலைமையில் கட்சியினா் பச்சை தலைப்பாகை அணிந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினா். விவசாயிகளுக்கு ஆதரவாக காய்கனிகள் மற்றும் பயிா்களை கையில் ஏந்தி மூன்று மசோதாக்களையும் வாபஸ் பெறக்கோரி முழக்கமிட்டனா். பின்னா் மசோதாக்களின் நகல்களையும் கிழித்து எறிந்தனா். மாவட்ட பொதுச் செயலா் சாகுல் ஹமீது, துணைத் தலைவா் சுப்பிரமணியன், மாவட்டச் செயலா்கள் கமால் பாஷா, சிக்கந்தா், மாவட்ட பொருளாளா் யூசுப், பாப்புலா் ஃப்ரண்ட ஆஃப் இந்தியா மதுரை மாவட்டத் தலைவா் அபுதாகிா் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT