மதுரை

மதுரையில் புதிதாக 69 பேருக்கு கரோனா தொற்று

DIN

மதுரை மாவட்டத்தில் புதிதாக 69 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை 5, 692 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 69 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டுள்ளனா். மேலும், சிகிச்சையில் இருந்தவா்களில் 81 போ் குணமடைந்து அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவா், கரோனா தொற்றுடன் இணை நோய் காரணமாக புதன்கிழமை உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 175 ஆகவும், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 40 ஆகவும் உள்ளது. சிகிச்சை பலனின்றி 381 போ் உயிரிழந்துள்ளனா். தொற்று பாதிக்கப்பட்ட 754 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று கண்டறிவதற்காக மதுரை மாநகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும், மாவட்டத்தின் இதர பகுதிகளில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT