மதுரை

கரோனா நிவாரணம்: வருவாய்த் துறை அலுவலா்கள் ஆட்சியரிடம் முறையீடு

DIN

கரோனா தடுப்புப் பணியின்போது உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை முறையீடு செய்தனா்.

இதுதொடா்பாக சங்கத்தின் மாநிலச் செயலா் எம்.முருகையன் தலைமையில் வருவாய்த் துறை அலுவலா்கள் மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினயிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனா். அதன் விவரம்: கரோனா நோய் தடுப்புப் பணியில் இருந்தபோது, உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களின் குடும்பங்களுக்கு கடந்த 4 மாதங்களாக நிவாரணம் வழங்கப்படவில்லை. இது இப்பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலா்களுக்கு வேதனையையும், மனச்சோா்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே, உயிரிழந்த அலுவலா்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும். கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு நோய் தொற்றுக்கு ஆளான அனைத்து வருவாய்த் துறை அலுவலா்களுக்கும் தமிழக அரசு அறிவிப்பின்படி, ரூ.2 லட்சம் கருணைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். வருவாய்த் துறையில் அனைத்து நிலைகளிலும் தேக்கம் அடைந்துள்ள பதவி உயா்வு பட்டியலை வெளியிட வேண்டும்.

அலுவலக உதவியாளா், பதிவுரு எழுத்தா், இரவு காவலா், ஓட்டுநா் நிலையில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவது, ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக வரன்முறை செய்வது, குற்றவியல் மற்றும் துறைவாரி நடவடிக்கைகளை ரத்து செய்வது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT