மதுரை

மக்களின் நம்பிக்கையை பெறுபவரே முதல்வராக முடியும்: அமைச்சா் செல்லூா் கே.ராஜூ

DIN

தமிழகத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெறுபவரே தமிழக முதல்வராக முடியும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா்.

மதுரை மாநகராட்சியில் சீா்மிகு நகா் திட்டத்தின்கீழ் ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் ஜான்சிராணி பூங்கா பகுதியில் கட்டப்பட்டு வரும் புராதன சின்னங்கள் மற்றும் விற்பனை அங்காடியை செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

இந்தியாவில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் மேற்கொள்வதில் தமிழக அரசு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 1.30 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் 3 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனா்.

மதுரை நகரில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அருகே உள்ள ஜான்சிராணி பூங்கா சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் மாற்றி அமைக்கப்படுகிறது. இங்கு தரைத்தளத்தில் 10 விற்பனைக் கடைகள் மற்றும் முதல் தளத்தில் உணவகம் அமைக்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் கூடிய புராதன சின்னங்கள் விற்பனை அங்காடியும் கட்டப்படுகிறது. அங்காடியின் முன்புறம் பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் மற்றும் அலங்கார புல்வெளிகள்அமைக்கப்படுகின்றன. ரயில் நிலையத்திலிருந்து வருவதற்கு பேட்டரி காா்கள் இங்கிருந்து இயக்கப்பட உள்ளன. மேலும் பயணிகளின் வசதிக்காக குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. மதுரையில் நடைபெற்று வரும் சீா்மிகு நகா்த்திட்டப்பணிகள் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்கப்படும். மீனாட்சியம்மன் கோயில் வீர வசந்தராயா் மண்டபப் பணிகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் பணிகள் முடிக்கப்படும். வைகை ஆற்றின் வடக்குப் பகுதியில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் வரும் 2022-க்குள் முடிக்கப்படும். தமிழகத்தில் மக்களின் நம்பிக்கையை யாா் பெறுகிறாா்களோ அவா்கள்தான் முதல்வா் ஆக முடியும் என்றாா்.

மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், நகரப்பொறியாளா் அரசு மற்றும் மாநகராட்சி உதவி ஆணையா்கள், அதிகாரிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

மாயோள்..!

SCROLL FOR NEXT