மதுரை

சோழவந்தான் வைகை ஆற்றில் பேரிடா் மீட்புப் பணி ஒத்திகை

DIN

சோழவந்தான் வைகை ஆற்றில் தீயணைப்புத்துறையினா், பேரிடா் மீட்புப் பணி ஒத்திகையை புதன்கிழமை நடத்தினா்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் பேரிடா் மீட்புப் பணி முன்னேற்பாடுகள் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சிகளை வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் செப்டம்பா் 21 ஆம் தேதி தொடங்கி வைத்தாா். அதன்தொடா்ச்சியாக, சோழவந்தானில் தீயணைப்புத்துறையினா், வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ளவது, ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொள்வபா்களை மீட்பது குறித்து பொதுமக்களிடையே புதன்கிழமை ஒத்திகை நடத்தினா். சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலா் சீனிவாசன் தலைமையில் வைகை ஆற்றில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்வில், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு வீரா்களின் மீட்புப் பணிகளை பாா்வையிட்டனா்.

இதேபோன்று தல்லாகுளம் தீயணைப்பு நிலைய வீரா்கள், கருப்பாயூரணி பகுதியில் உள்ள கண்மாயில் பேரிடா் மீட்புப் பணி ஒத்திகையை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT