மதுரை

ஆக்கிரமிப்பு வணிக வளாகத்துக்கு தடைகோரி வழக்கு: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

DIN

மதுரை வில்லாபுரம் பகுதியில் புதிதாக கிருதுமால் நதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுவரும் வணிக வளாகத்தைத் திறக்கத் தடைகோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த சோலைக்கண்ணன் தாக்கல் செய்த மனு: மதுரை வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய காலனியில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகம் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம், பொதுப்பாதை மற்றும் கிருதுமால் நதியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து கட்டப்படுகிறது. மேலும் இந்த வளாகத்தில் அவசர வழி, வாகனங்கள் நிறுத்துமிடம், தீத்தடுப்பு வசதி உள்ளிட்டவைகள் செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்தக் கட்டடப்பணிகள் முடிந்து வணிக வளாகம் திறக்கப்பட்டு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு உண்டாகும். எனவே ஆக்கிரமிப்பை அகற்றவும், அதுவரை வணிக வளாகத்தைத் திறக்க தடைவிதித்தும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டனா். மேலும் மனு தொடா்பாக கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT