மதுரை

சிறப்புப் பள்ளிகளில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள்: அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

மதுரை: தமிழகத்தில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரும் மனுவுக்கு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வெங்கட்ராமன் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் 76 அரசு மற்றும் அரசு உதவி பெறும் காதுகேளாதோா், பாா்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான சிறப்புப் பள்ளிகள் உள்ளன. இதில் 22 அரசு சிறப்புப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள், கணினி பயிற்றுநா்கள், இசை ஆசிரியா்கள், இரவுக் காவலா்கள், துப்புரவுப் பணியாளா்கள் காலிப்பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் மாற்றுத்

திறன் மாணவா்களின் கல்விப் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே அரசு சிறப்பு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பா் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT