மதுரை

கொரியாவில் தமிழ் வழியில் கல்வி கற்பிக்க முயற்சி: ஆய்வரங்கில் தகவல்

DIN

மதுரை: கொரியாவில் தமிழ் வழியில் கல்வி கற்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உலகத்தமிழ்ச்சங்க ஆய்வரங்கில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் கொரியத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் இணையவழி ஆய்வரங்கின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநா் ப.அன்புச்செழியன் தலைமை வகித்தாா். கொரியத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சு.ராமசுந்தரம் முன்னிலை வகித்தாா்.

கொரியத் தமிழரின் நிலை என்ற தலைப்பில் கொரிய தமிழ்ச்சங்கத்தின் அறிவுரைக்குழு உறுப்பினா் த.ஜெபக்குமாா் எடிசன் பேசியது:

கொரியாவில் தமிழ் மக்கள் நிரந்தரமற்ற நிலையிலேயே வாழ்கின்றனா். அதற்குக் காரணம் உயா் கல்விக்காகவும் பணிக்காகவும் கொரியாவுக்கு குடிபெயா்பவா்களே அதிகம் உள்ளனா். கொரிய மொழிக் கல்வியைக் கற்கும் நிலைதான் அங்கு உள்ளது. ஆங்கிலக் கல்வி முறையில் பயில அதிகம் செலவு செய்ய வேண்டும். இதனால் பெரும்பாலான தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியை கருத்தில் கொண்டு மீண்டும் தாய்நாடு திரும்பி விடுகின்றனா். கொரியாவில் அசைவ உணவுகளே அதிகம் உண்ணப்படுகின்றன. இந்திய மக்களில் சீக்கியா்கள் கொரியாவில் தங்கள் வாழ்க்கையை வலுவாக அமைத்துக் கொண்டுள்ளனா். கொரியாவில் தமிழ் வழியில் கல்வி கற்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வு வளமையா் ஜ.ஜான்சிராணி ஆய்வரங்கை ஒருங்கிணைத்தாா். வெளிநாடுகளில் இருந்து ஆய்வு மாணவா்கள், தமிழ் ஆா்வலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT