மதுரை

குட்லாடம்பட்டி அருவி பகுதியை சீரமைக்ககோரிய வழக்கு: ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

DIN

மதுரை: கஜா புயலால் சேதமடைந்த குட்லாடம்பட்டி அருவி பகுதியைச் சீரமைக்கக் கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியா், மாவட்ட வன அலுவலா் ஆகியோா் பதிலளிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சக்கரை முகமது என்பவா் தாக்கல் செய்த மனு:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் குட்லாடம்பட்டி அருவி உள்ளது. இந்த அருவியில் மழைக் காலங்களில் மட்டுமே தண்ணீா் வரும். இந்நிலையில், 2016-இல் இந்த அருவி அருகே குழந்தைகள், பெண்கள் குளிப்பதற்காக ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் தொட்டி அமைக்கப்பட்டது. இதையடுத்து, அருவிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமானது.

கடந்த 2018-இல் கஜா புயலின்போது, இந்த அருவி பகுதி முழுவதும் சேதமடைந்தது. இதனால், குட்லாடம்பட்டி அருவியில் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை புயலால் சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்படாமல் உள்ளன.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, குட்லாடம்பட்டி அருவி பகுதியைச் சீரமைக்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம். சத்தியநாராயணன். பி. ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா், மாவட்ட வன அலுவலா் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT