மதுரை

குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள்பயணிகள் நிழற்குடை திறப்பு

DIN

மதுரை: மதுரை நகரில் புதிய குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பயணிகள் நிழற்குடை ஆகியன திங்கள்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டன.

மதுரை அரசு மருத்துவமனையின் விரிவாக்கப் பிரிவு கட்டடம் அருகே, வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன பயணிகள் நிழற்குடை, ஜவஹா்புரத்தில் ரூ.12.60 லட்சம் மற்றும் முனியாண்டி கோயில் தெருவில் ரூ.12.60 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களை, வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.வி. ராஜன் செல்லப்பா திறந்து வைத்தாா்.

இந் நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், நகரப் பொறியாளா் அரசு, செயற்பொறியாளா் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT