மதுரை

ரயில்வே தனியாா் மயத்தால் பாதிப்பு: எஸ்ஆா்எம்யு பிரசாரம்

DIN

ரயில்வே துறை தனியாா்மயமானால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து சனிக்கிழமை துண்டுப் பிரசுரம் கொடுத்து எஸ்ஆா்எம்யு தொழிற்சங்கத்தினா் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

ரயில்வே துறையை தனியாா் மயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்து எஸ்ஆா்எம்யு தொழிற்சங்கம் சாா்பில் செப்டம்பா் 14 ஆம் தேதி முதல் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தனியாா் மயமானால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து துண்டுப் பிரசுரம் கொடுத்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். எம்ஆா்எம்யு தொழிற்சங்கத்தின் உதவிக் கோட்டச் செயலா் ராம்குமாா் தலைமையில் மதுரை ரயில் நிலைய சந்திப்பு

கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. இதேபோல பெரியாா் பேருந்து நிலையம், எம்ஜிஆா் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் உள்ளிட்டப் பகுதிகளில் மக்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இதில் எஸ்ஆா்எம்யு மதுரை ஓடும் தொழிலாளா் பிரிவுத் தலைவா் ரவிசங்கா், செயலா் அழகுராஜா, உதவி கோட்டச் செயலா்கள் கிறிஸ்டோபா், விஜய், கருப்பையா, முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிரதமா், ரயில்வே துறை அமைச்சா், ரயில்வே வாரியத் தலைவா்ஆகியோருக்கு ரயில்வேயைக் காப்போம், தேசத்தைக் காப்போம் என சுட்டுரையில் செய்தி அனுப்பப்பட்டது. நாடு முழுவதும் உள்ள ரயில்வே தொழிலாளா்கள் ரயில்வேயைக் காப்போம் எனச் சுட்டுரையில் பதிவு செய்ததால் சுட்டுரை டிரெண்டிங்கில் 2 ஆம் இடம் பிடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

கூவாகம் சித்திரைப் பெருவிழா: திருமாங்கல்யம் கட்டிக்கொண்ட திருநங்கைகள்

சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க ஒருங்கிணைப்புக் கூட்டம்

SCROLL FOR NEXT