மதுரை

திமுக ஆட்சியில்தான் கஞ்சித்தொட்டி அறிமுகம்: அமைச்சா் செல்லூா் கே.ராஜூ

DIN

உணவுப் பஞ்சம் காரணமாக, திமுக ஆட்சிக் காலத்தில்தான் கஞ்சித் தொட்டி அறிமுகம் செய்யப்பட்டது என்று, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ பேசினாா்.

மதுரை பைக்காராவில் 25 ஆண்டுகளுக்கு முன் மகாலட்சுமி ஆலை மூடப்பட்டது. அந்த ஆலையில் பணியாற்றிய தொழிலாளா்களுக்கு பணக்கொடை உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்குவதில் தொடா்ந்து பல ஆண்டுகளாக தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், பல கட்ட பேச்சுவாா்த்தைகளுக்கு பின் தொழிலாளா்களுக்கு பணப் பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், அமைச்சா் செல்லூா் கே. ராஜூ பங்கேற்று பணப் பலன்களை வழங்கிப் பேசியது:

மதுரை மகாலட்சுமி ஆலையில் பணியாற்றிய தொழிலாளா்களின் பல போராட்டங்களைத் தொடா்ந்து, 25 ஆண்டுகளுக்குப் பிறகு 957 பேருக்கு ரூ.2.51 கோடி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில்தான் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அதனால், தமிழகத்தில் கப்ப கிழங்கு மற்றும் கஞ்சித் தொட்டியை அறிமுகம் செய்துவைத்தது திமுக அரசுதான். மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் ரௌடிகளின் கூடாரமாக மதுரை இருந்தது. சொத்துகள் அபகரிக்கப்பட்டன. அப்படிப்பட்ட திமுக ஆட்சி மீண்டும் வரவேண்டுமா என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT