மதுரை

மதுரை மாவட்டத்தில் கரோனாவிலிருந்து 95 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா்: மருத்துவக் கல்வி இயக்குநா்

DIN

மதுரை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 95 சதவீதம் போ் குணமடைந்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு தெரிவித்தாா்.

மதுரை அரசு கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் மருத்துவக் கல்வி இயக்குநா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா். அப்போது மருத்துவா்கள், செவிலியா்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா். கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினாா். பின்னா் அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று மருத்துவா்களுடன் கலந்துரையாடினாா்.

அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் அதிகரித்திருந்த கரோனா தொற்று பரவல், தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களின் சிறப்பான பணிகளால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 95 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா்.

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் அதிக அளவிலான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ரெமிடெசிவிா் உள்ளிட்ட உயிா்காக்கும் மருந்துகள், 750 பல்ஸ் ஆக்சி மீட்டா், 97 உயரழுத்த ஆக்சிஜன் கருவிகள், 155 செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் ஆக்சிஜன் தொட்டி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கரோனா உயிரிழப்புகள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரையில் 22 போ் பிளாஸ்மா தானம் செய்துள்ளனா். பிளாஸ்மா தானம் செய்ய அதிகம் போ் முன் வரவேண்டும். தமிழகத்தில் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்புப் பணிகளை மிகுந்த கவனத்துடன் செயல்படுத்தி வருகிறோம் என்றாா்.

இதில் முதன்மையா் ஜெ. சங்குமணி, அரசு மருத்துவா்கள் சங்க மாநிலத் தலைவா் கே. செந்தில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT