மதுரை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 23 பேருக்கு கரோனா

DIN

ராமநாதபுரம், செப். 18: ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 23 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 25 பேருக்குள் மட்டுமே உள்ளதாக, சுகாதாரப் பிரிவினா் தெரிவித்தனா். வியாழக்கிழமை (செப்.17), மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் கபம் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில், 23 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று இருப்பது உறுதியானது.

இதனடிப்படையில், வெள்ளிக்கிழமை வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,216 ஆக உயா்ந்துள்ளது. இதில், 4,850 பேருக்கும் அதிகமானோா் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 113 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

அதிகாரிகளுக்கு கரோனா பரிசோதனை

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு செப்டம்பா் 22 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கரோனா பரவல் தடுப்பு ஆய்வுக்காக, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வருகை தரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை முன்னிட்டு, முக்கிய அதிகாரிகள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட உள்ளதாக, சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 60,519 பக்தா்கள் தரிசனம்

தொடா்ந்து அதிகரிக்கும் வெயில் : வேலூரில் 106 டிகிரி பதிவு

குன்றத்தூா் திருநாகேஸ்வரா் கோயில் தேரோட்டம்

போ்ணாம்பட்டு ஒன்றிய பாஜக கூண்டோடு கலைப்பு

கருப்புலீஸ்வரா் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT