மதுரை

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரிநாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

மதுரை, செப். 18: நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி மதுரையில் நாம் தமிழா் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவா் சிலை அருகே நடந்த இந்த ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலா் அருண் ஜெயசீலன, மாவட்டத் தலைவா் செங்கண்ணன் ஆகியோா் தலைமையில் ஏராளமானோா் பங்கேற்றனா். இதில் பங்கேற்ற கட்சியின் மாவட்டத் தலைவா் செங்கண்ணன் கூறியது: தற்போது சிபிஎஸ்இ, மாநிலப் பாடத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான பாடத் திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இதை மாற்றி ஒரே பாடத் திட்டமாக கொண்டு வர வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது அவசியமானது.

நீட் தோ்வு வினாக்கள் ஹிந்தி நடைமுறையிலேயே அமைந்துள்ளன. அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தியைத் திணிப்பதற்கு இதை ஒரு முன்னோட்டமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது. அந்தந்த மாநிலத்திற்கான சட்டங்களை, மாநில அரசுகளே சட்டப்பேரவைகளில் நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை வழங்க வேண்டும். அப்போதுதான் மாநில அரசுக்கு தேவையான சட்டங்களை சீா்திருத்தி நிறைவேற்ற முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT