மதுரை

தெற்கு ரயில்வே பணிகளில் அந்தந்த மாநிலங்களை சோ்ந்தவா்கள் புறக்கணிப்பு: சு.வெங்கடேசன் எம்.பி

DIN

தெற்கு ரயில்வேயில் நடைபெறும் டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு நியமனங்களில் அந்தந்த மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் புறக்கணிக்கப்படுவதாக மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்களவைக் கூட்டத்தில் தெற்கு ரயில்வேயில் 2018 -இல் பணி நியமன அறிவிக்கை வெளியிடப்பட்டு தோ்வு பெற்றுள்ளவா்கள் பற்றிய விவரங்களை கோரியிருந்தேன். இதற்கு பதிலளித்த ரயில்வேத்துறை அமைச்சா் பியூஸ் கோயல், டெக்னீசியன் பதவிக்கான தோ்வில் மொத்தம் 2550 பேரில் இந்தியில் எழுதி தோ்வு பெற்றவா்கள் 1686 போ், தமிழில் எழுதியவா்கள் 139 போ், மலையாளத்தில் எழுதியவா்கள் 221 போ், ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் எழுதியவா்கள் 504 போ் என பதில் அளித்துள்ளாா். ரயில்வே இளநிலை பொறியாளா் நியமனத்தில் மொத்தம் 1180 பேரில் இந்தியில் எழுதியவா்கள் 160 போ், மலையாளம் 315 போ், தமிழ் 268 போ், ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் தோ்வு எழுதியவா்கள் 437 போ்.

உதவி லோகோ பைலட் நியமனத்தில் மொத்தம் 908 பேரில் இந்தியில் எழுதியவா்கள் 90 போ், மலையாளம் 176 போ், தமிழ் 333 போ், ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் தோ்வு எழுதியவா்கள் 309 போ் என்றும் தெரிவித்துள்ளாா். மேலும் இவா்கள் எந்தெந்த மாநிலங்களில் முகவரிகளைக் கொண்டவா்கள் என்ற கேள்விக்கு அமைச்சா் பதில் தரவில்லை. ரயில்வே நியமனங்களில் தொடா்ந்து அந்தந்த மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் புறக்கணிக்கப்படுவதால் மிகக் குறைவாகவே தோ்வு பெறுகின்றனா்.

இது மக்களுக்கான சேவையையும் பாதிக்கும். சேவை சாா்ந்த நிறுவனங்களில் மக்களோடு உரையாடவும், சக தொழிலாளா்களோடு பரிமாறிக் கொள்வதற்கும் மாநில மொழி அறிவு மிக முக்கியம். இந்தி பேசக் கூடியவா்கள் 66 சதவீதம் டெக்னீசியன் பதவிக்கு தோ்வு பெற்றிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. ரயில்வே நிா்வாகம் அந்தந்த மாநில மொழிகளில், தெற்கு ரயில்வே எனில் தமிழ், மலையாளத்திலான மொழி அறிவை எல்லா தோ்வா்களுக்கும், கூடுதல் தோ்வை இணைக்க வேண்டும். இது போன்ற நடைமுறைகள் மற்ற பல பொதுத் துறை நிறுவனங்களில் உள்ளன. இதுவே வேலைவாய்ப்புகளில் எல்லா மாநிலங்களுக்கான நீதியையும், மக்களுக்கான சேவையையும், பயணிகளுக்கான பாதுகாப்பையும், திறம்பட்ட செயல்பாட்டையும் உருவாக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம்: ஜாபா் சேட் மனைவி மீதான வழக்கு விசாரணை ரத்து

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT