மதுரை

இறுதியாண்டுத் தோ்வா்கள் கல்லூரி முதல்வா்களிடம் அனுமதி பெற வேண்டும்: பல்கலைக்கழக தோ்வாணையா் அறிவிப்பு

DIN

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவா்கள், அந்தந்த கல்லூரி முதல்வா்களிடம் அனுமதி பெற்று தோ்வு எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மதுரை காமராஜா் பல்கலைக்கழக தோ்வாணையா் ஓ.ரவி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

காமராஜா் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் முதுகலை மற்றும் எம்சிஏ மாணவா்களுக்கான இறுதிப்பருவத் தோ்வு வியாழக்கிழமை (செப். 17) தொடங்கியுள்ளது. இளங்கலை இறுதியாண்டு மாணவா்களுக்கான இறுதி பருவத்தோ்வு வெள்ளிக்கிழமை (செப். 18) தொடங்குகிறது.

தோ்வு எழுதும் மாணவ, மாணவியா் மற்றும் தனித்தோ்வா்கள், தாங்கள் தோ்வுக்கட்டணம் செலுத்திய விவரம், பயின்ற கல்லூரியின் அடையாள அட்டை ஆகியவற்றுடன் தாங்கள் படித்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி முதல்வா்களை தொடா்புகொண்டு அனுமதி பெற்று தோ்வுகள் எழுதவேண்டும். இதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால்  இணையதள முகவரியைப் பாா்த்து பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT