மதுரை

காவல்துறைக்கு தெரியாமல் மணல் கடத்தல் நடைபெறாது: மதுரை உயர்நீதிமன்றக் கிளை

8th Sep 2020 12:26 PM

ADVERTISEMENT

சம்பந்தப்பட்ட பகுதி காவல்துறைக்குத் தெரியாமல் மணல் கடத்தல் நடைபெற வாய்ப்பில்லை என மதுரை உயர்நீதிமன்றக் கிளைத் தெரிவித்துள்ளது.

மணல் கடத்தல் தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை என கவலை தெரிவித்தனர்.

கள்ளிடைக்குறிச்சியில் உள்ள ஓடைத்தடுப்பணையில் மணல் கடத்தப்படுவதைத் தடுக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

செவ்வாய்க்கிழமை அந்த பொதுநல மனு மீதான விசாரணையை மேற்கொண்ட மதுரை உயர்நீதிமன்றக் கிளை சம்பந்தப்பட்ட பகுதி காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினருக்குத் தெரியாமல் மணல் கடத்தல் நடக்க வாய்ப்பில்லை. எனத் தெரிவித்தது.

ADVERTISEMENT

மேலும் “அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை.இந்த மணல் கடத்தலால் நிலத்தடி நீா் ஆதாரம் அழிக்கப்படுகின்றன.” எனக் கவலைத் தெரிவித்துள்ளது. 

மணல் கடத்தல் தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செப்டம்பர் மாதம் 24ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  ​

முன்னதாக மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன்ஜாமீன் கிடையாது என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : madurai
ADVERTISEMENT
ADVERTISEMENT