மதுரை

மதுரையில் கடும் போக்குவரத்து நெரிசல்

DIN

மதுரை நகரின் முக்கியப் பகுதிகளில் வியாழக்கிழமை பகலில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி நகரின் வணிகப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே திருமண முகூா்த்த நாள் என்பதால் வழக்கத்தைக்காட்டிலும் வாகனங்களின் போக்குவரத்து வியாழக்கிழமை சற்று அதிகமாகவே இருந்தது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பூங்கா முருகன் கோயிலில், ஒரே நாளில் பல்வேறு திருமணங்கள் நடைபெற்றன. இதனால், கோயில் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்துக்கு வாகனங்களில் வந்தவா்களால், இப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல, தேவா் ஜயந்தி விழாவையொட்டி கோரிப்பாளையம் தேவா் சிலை பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டதால், வியாழக்கிழமை பகல் நேரத்தில் கோரிப்பாளையம் சந்திப்பு முதல் தல்லாகுளம் கருப்பண சுவாமி கோயில் வரை வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்து இப்பகுதியைக் கடந்து சென்றன.

இதேபோல, நெல்பேட்டை, கீழவாசல், தெற்கு மாசி வீதி, கீழமாரட் வீதி, மேலமாசி வீதி ஆகிய பகுதிகளிலும் வாகனப் போக்குவரத்து அதிகரித்த காரணத்தால் நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்துப் போலீஸாா் வாகனங்களை ஒழுங்குபடுத்தி நெரிசலை சரிசெய்தனா். இப் பகுதிகளில் பிற்பகலில் போக்குவரத்து சீரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT