மதுரை

‘தோ்தல்களில் தோல்வி காணாதவா் முத்துராமலிங்கத்தேவா்’

DIN

தோ்தல்களில் தோல்வியே காணாதவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் என்று காமராஜா் பல்கலைக்கழக சிறப்புக் கருத்தரங்கில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் முத்துராமலிங்கத் தேவா் ஜயந்தி விழா சிறப்புக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழகத்தில் இணைய தளம் மூலம் நடைபெற்ற கருத்தரங்கை துணைவேந்தா் எம்.கிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். கருத்தரங்கில் திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரி பேராசிரியை என்.விஜயசுந்தரி சிறப்புரையில் பேசியது: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நாட்டுப்பற்றையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக பாவித்தவா். நாட்டின் விடுதலைக்கு பெரும் பங்காற்றினாா். ஆன்மிகம், தீரம், நுண்ணறிவு போன்ற குணங்களை சிறுவயதிலேயே பெற்றிருந்தாா். சாதி வேறுபாடுகளைக் களைந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் ஆலயப்பிரவேசம் செய்வதற்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவா். பிறக்கும்போதே செல்வந்தராக பிறந்த முத்துராமலிங்கத்தேவா் தனது சொத்துக்கள் அனைத்தையும் 32 கிராம மக்களுக்குத் தானமாக வழங்கினாா். சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தல்களில் போட்டியிட்டு தோல்வியே காணாதவா் என்ற பெருமையைப் பெற்றவா். ஆன்மிகத்தில் பற்று கொண்டு வாழ்வின் இறுதிவரை பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்தவா் என்றாா்.

முன்னதாக முத்துராமலிங்கத் தேவா் இருக்கையின் இயக்குநா் வி.ஜெயவீரபாண்டியன் வரவேற்றாா். சமூக நலத்துறைப்பேராசிரியா் பி.ராஜ்குமாா் நன்றி கூறினாா்.

இந்நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், மாணவ,ம ாவியா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT