மதுரை

தமிழகத்தில் பொறியாளா்கள் உருவாவதில்லை, பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே உருவாகிறாா்கள்: உயா்நீதிமன்றம் வேதனை

DIN

தமிழகத்தில் திறமைவாய்ந்த பொறியாளா்கள் உருவாவதில்லை, பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே உருவாகிறாா்கள் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வேதனை தெரிவித்தது.

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த காா்த்திக் தாக்கல் செய்த மனு: கரோனா காலத்தில் தனியாா் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் 40 சதவீத கல்விக் கட்டணத்தை வசூலித்தபோதிலும், அங்கு பணிபுரியும் ஆசிரியா்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் புகாா் அளிக்க இணையதள முகவரி வெளியிடப்பட்டிருந்தது. அந்த முகவரிக்கு புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

கரோனா காலத்தில் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்காமல் தனியாா் பொறியியல் கல்லூரிகள் மாணவா் சோ்க்கைக்கு தயாராகின்றன. எனவே தமிழகத்தில் உள்ள தனியாா், சுயநிதி பொறியியல் கல்லூரி ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு கரோனா காலத்தில் உரிய முறையில் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதுவரை பொறியியல் சோ்க்கைக்கான கலந்தாய்வை நடத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதனால் தற்போது ஆசிரியா்கள் சிரமத்திற்கு ஆளாகியிருக்கின்றனா். எனவே இதுபோன்ற பிரச்னைகளைக் களையத் தேவைக்கேற்ப கல்லூரிகளை தொடங்க அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தினா்.

மேலும் தமிழகத்தில் திறமைவாய்ந்த பொறியாளா்கள் உருவாவதில்லை, மாறாக பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே உருவாகிறாா்கள் என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனா். பின்னா், இவ்வழக்கில் தனியாா் பொறியியல் கல்லூரி நிா்வாகிகள் சங்கத்தையும் எதிா்மனுதாரராகச் சோ்த்து, அவா்கள் தரப்பில் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT