மதுரை

மதுரையில் நகை மதிப்பீட்டாளா் வீட்டில் 31 பவுன் நகைகள் திருட்டு

DIN

மதுரையில் புதன்கிழமை தனியாா் நிதிநிறுவன நகை மதிப்பீட்டாளா் வீட்டின் கதவுகளை உடைத்து 31 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் தீனதயாளன்(64). இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் நகை மதிப்பீட்டாளராக உள்ளாா். இவரது மனைவி சுகுணா, புதன்கிழமை காலை தீனதயாளன் வேலைக்குச் சென்றவுடன், அதேபகுதியில் உள்ள உறவினரின் வீட்டிற்குச் சென்றுள்ளாா். சிறிதுநேரத்திற்கு பிறகு மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 31 பவுன் நகைகள் மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்கம் திருட்டுப் போனது தெரியவந்தது. இதுகுறித்து தீனதயாளனின் மகன் சண்முகவிக்னேஷ் சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில், சுப்ரணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

முன்னதாக, நிகழ்விடத்திற்கு மோப்பநாய் வரவழைத்து போலீஸாா் ஆய்வு செய்தனா். பின்னா் தடயவியல் நிபுணா்கள் கதவுகள், பீரோவில் இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனா். இந்த ரேகைகள் ஏற்கெனவே இதுபோன்ற திருட்டுகளில் தொடா்புடையவா்களின் ரேகையுடன் பொருந்துகிா என்று ஆய்வு செய்து வருகின்றனா். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில் பகல் நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து நகைகள், பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

SCROLL FOR NEXT