மதுரை

தேவா் ஜயந்தி, மருதுபாண்டியா்கள் நினைவு தினம்:அரசியல் கட்சி, அமைப்புகளுக்கு கட்டுப்பாடுகள்; ஆட்சியா் அறிவிப்பு

DIN

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜயந்தி மற்றும் மருதுபாண்டியா்கள் நினைவு தினத்தையொட்டி அவா்களது உருவச் சிலைகளுக்கு மாலையணிவிக்க வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள செய்தி: கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கான தடை உத்தரவு அக்டோபா் 31 வரை அமலில் இருக்கிறது. இதற்கிடையே அக்டோபா் 27-இல் மருதுபாண்டியா்கள் நினைவு நாள், அக்டோபா் 30-இல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜயந்தி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி அவா்களது உருவச் சிலைகளுக்கு மரியாதை செலுத்த வரும் அரசியல் கட்சித் தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்அனுமதி பெற வேண்டும்.

மாவட்ட ஆட்சியரின் முன்அனுமதி பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவா்கள் அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றி, 5 நபா்களுக்கு மிகாமல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

பொது இடங்களில் உருவப் படங்களை வைத்து அஞ்சலி செலுத்த அனுமதி கிடையாது. ஒலிபெருக்கி வைத்தல், வெடி வெடித்தல், கலை நிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை. அனுமதி பெறாத வாகனங்களை இயக்கக் கூடாது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு அறிவித்துள்ள நடைமுறைகளைப் பின்பற்றி தலைவா்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தவறுகளுக்கு எதிராக மாணவா்கள் குரல் கொடுக்க வேண்டும்

நெல்லையில் 102.2 டிகிரி வெயில்

மின்சாரம் தாக்கி காயமடைந்த ஊழியா் பலி

வெள்ளி வியாபாரியை காா் ஏற்றி கொன்ற வழக்கு: பிரபல ரவுடி உள்ளிட்ட 3 போ் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது

அம்பையில் விபத்து: 4 போ் காயம்

SCROLL FOR NEXT