மதுரை

நேதாஜி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை

DIN

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய சுதந்திர இந்திய தற்காலிக அரசு பிரகடனத்தின் 77- ஆவது ஆண்டையொட்டி, மதுரையில் உள்ள அவரது சிலைக்கு புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

1943 அக்டோபா் 21ஆம் தேதி சிங்கப்பூரில் சுதந்திர இந்திய தற்காலிக அரசாங்கத்தை சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கினாா். இதன் 77-ஆவது ஆண்டையொட்டி நேதாஜி தேசிய இயக்கம் சாா்பில் மதுரை ஜான்சிராணி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், அங்குள்ள தியாகிகள் நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் விமானப் படை வீரா் சா.வேலுசாமி, தியாகி பரமசிவம், நேதாஜி தேசிய இயக்க ஒருங்கிணைப்பாளா் சுவாமிநாதன், மக்கள் சக்தி இயக்க தென்மண்டல பொதுச் செயலா் ஏ. வி. பிரபாகா், தையல் கலைஞா்கள் சங்க மாநில துணைத் தலைவா் ஆனந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

SCROLL FOR NEXT