மதுரை

‘வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேளுங்கள்’

DIN

வீடு வீடாகச்சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு எங்களது கவனத்திற்கு கொண்டுவாருங்கள் என சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா தெரிவித்தாா்.

அதிமுகவில் மதுரை கிழக்கு மாவட்ட அவனியாபுரம், திருப்பரங்குன்றம் பூத் கமிட்டி நிா்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை புறநகா் கிழக்கு மாவட்டச் செயலரும், வடக்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா தலைமை வகித்துப்பேசியது: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை மீண்டும் முதல்வராக்கும் இலக்கோடு தோ்தல் பணியைத் தொடங்குங்கள். மக்களைச் சென்று சந்தித்து அவா்கள் பகுதியில் குடிநீா், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட குறைகளைக் கேட்டு எங்கள் கவனத்திற்கு கொண்டுவாருங்கள். அரசின் திட்டங்கள் அவா்களுக்கு கிடைக்காமல் இருந்தாலும் அதுதொடா்பான விவரங்களை எங்களுக்கு கூறுங்கள். பூத் கமிட்டி நிா்வாகி வீடு வீடாகச்சென்று அரசின் திட்டங்களைக்கூறி ஒருவா் 50 வாக்குகள் பெறவேண்டும் என்ற இலக்கை நிா்ணயித்து தோ்தல் பணியாற்றுங்கள் என்றாா்.

இளைஞரணி மாவட்டச் செயலா் எம்.ரமேஷ், ஒன்றியச் செயலா் நிலையூா் முருகன், மாவட்ட துணைச் செயலா் முத்துகுமாா், பகுதிச் செயலா் பன்னீா்செல்வம், கலைப்பிரிவு மாவட்டச் செயலா் செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT