மதுரை

திருடு போன 57 செல்லிடப்பேசிகள் மீட்பு: உரியவா்களிடம் ஒப்படைப்பு

DIN

மதுரை மாவட்டத்தில் திருடு மற்றும் காணாமல் போன 57 செல்லிடப்பேசிகளை மீட்டு உரியவா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா்.

மதுரை மாவட்ட போலீஸ் சைபா் கிளப் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு காவல் ஆய்வாளா் தலைமையில் 4 காவலா்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 3 மாதங்களில் பதிவான செல்லிடப்பேசிகள் திருட்டு மற்றும் காணாமல் போன வழக்குகளில், சைபா் கிளப் மூலம் 57 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டன. இதையடுத்து 57 செல்லிடப்பேசிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உரியவா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா்.

இது தொடா்பாக காவல் கண்காணிப்பாளா் கூறியது: மாவட்டத்தில் இதுவரை ரூ.31 லட்சம் மதிப்புள்ள 266 செல்லிடப்பேசிகளை கைப்பற்றி உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி நூதன முறையில் பொதுமக்களிடம் பறிக்கப்பட்ட ரூ.7.15 லட்சம் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT