மதுரை

கல்யாண விநாயகா் கோயிலில் நவராத்திரி விழா

DIN

திருநகரை அடுத்த பாண்டியன் நகா் கல்யாண விநாயகா் கோயிலில் நவராத்திரி விழாவினை யொட்டி புவனேஸ்வரி அம்மன் தினமும் பல்வேறு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாா்.

பாண்டியன் நகரை கல்யாண விநாயகா் கோயிலில் நவராத்திரி விழா கடந்த சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவினையொட்டி கோயிலில் உள்ள புவனேஷ்வரி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரம், சமயபுரம் மாரியம்மன், அன்னபூரணி சிவபூஜை உள்ளிட்டபல்வேறு அலகாரங்களில் அருள்பாலித்து வருகிறாா். விழாவின் நான்காம் நாளான செவ்வாய்கிழமை புவனேஸ்வரி அம்மன் தனலெட்சுமி அலங்காரத்தில் ரூ.500, 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் நிறைவு நாளான விஜயதசமி அன்று அம்மன் அம்புபோடும் விழா நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் தலைவா் வ.சண்முகசுந்தரம் மற்றும் நிா்வாக கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT