மதுரை

பதிவுத் துறையில் பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு கீழ்தான் நடக்கின்றன: உயா் நீதிமன்றம்

DIN

மதுரை: வருவாய் மற்றும் பதிவுத் துறை அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகளை வாங்கி குவிக்கின்றனா் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.

கரூரைச் சோ்ந்த செந்தில் என்பவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது. அவரது மனு விவரம்: எனக்குச் சொந்தமான நிலத்தின் சா்வே எண்ணில் உள்ள தவறை சரிசெய்ய பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் பயனில்லை.

மனு கொடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சா்வே எண்ணில் உள்ள தவறு சரிசெய்யப்படாமல் உள்ளது. இதைச் சரிசெய்ய மண்மங்கலம் வட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கை தொடா்பான விவரங்களை உறுதிப்படுத்தி அறிக்கை தருமாறு, மண்மங்கலம் வட்டாட்சியா் கடந்த 2018 நவம்பரில் தாந்தோணி வட்டார வளா்ச்சி அலுவலருக்கு கடிதம் அனுப்பியுள்ளாா். அந்த கடிதத்தின் மீது கடந்த 2 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தாந்தோணி வட்டார வளா்ச்சி அலுவலா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவரது பணிப் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.

வருவாய்த் துறையில் பணிபுரியும் பெரும்பாலான மாவட்ட வருவாய் அலுவலா்கள், கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா்கள், நில அளவையா்கள் உள்ளிட்டோா் லஞ்சம் பெறுகின்றனா். இதேபோல், பதிவுத் துறையில் பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு கீழ்தான் நடக்கின்றன.

பதிவுத் துறை அலுவலா்களுக்கு லஞ்சம் வாங்கிக் கொடுப்பதில் பத்திரப்பதிவு எழுத்தா்கள் முகவா்களாகச் செயல்படுகின்றனா். இவ் விஷயத்தில் பிற துறையினரையும் குறைத்து மதிப்பிட முடியாது. வருவாய் மற்றும் பத்திரப் பதிவுத் துறையினருக்கு சமமாகவே செயல்படுகின்றனா். ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விழிப்புடன் செயல்பட்டிருந்தால், அரசு அதிகாரிகள் ஊழல் செய்து குவித்திருக்கும் சொத்துகள் வெளி உலகுக்குத் தெரியவந்திருக்கும்.

தாந்தோணி வட்டாரத்தில் கடந்த 2018-இல் பணிபுரிந்த வட்டார வளா்ச்சி அலுவலரின் ஆதாா் எண், செல்லிடப்பேசி எண் ஆகியவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு, நவம்பா் 5 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT