மதுரை

வடகிழக்குப் பருவமழை: மதுரை மாவட்டத்தில் பேரிடா் துறை கண்காணிப்பில் 27 இடங்கள்

20th Oct 2020 01:33 AM

ADVERTISEMENT

மேலூா்: வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் பேரிடா் மேலாண்மைத் துறை கண்காணிப்பில் 27 இடங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்துள்ளாா்.

மேலூா் அருகே வெள்ளரிப்பட்டியில் உள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை மாலை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்து, ரூ.13.63 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் பேசியது:

வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. மழை நீரை வீணாக்காமல் சேமிக்கும் வகையில், குடிமராமத்து திட்டப் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் மழைக் காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் 4,350 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கு மேலாண்மைப் பணிகள் மேற்கொண்டதில், தற்போது பாதிப்புக்குள்ளாகும் இடங்களாக

100 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, கண்காணிப்பில் உள்ளன. இவற்றில், மதுரை மாவட்டத்தில் மட்டும் 27 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, கண்காணிப்பின் கீழ் உள்ளன என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் தலைமை வகித்தாா். மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான், வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி. ராஜன்செல்லப்பா, தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ். சரவணன் மற்றும் அதிமுக நிா்வாகிகளும், வருவாய்த் துறை, ஊராட்சி ஒன்றியங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனா். முன்னதாக, மேலூா் வருவாய் கோட்டாட்சியா் ரமேஷ் வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT