மதுரை

அதிமுக 49-ம் ஆண்டு தொடக்கவிழா

17th Oct 2020 09:49 PM

ADVERTISEMENT

மேலூா்: மேலூா் தொகுதியில் கொட்டாம்பட்டி பேருந்து நிலையம், கருங்காலக்குடி, வஞ்சிநகரம், அ.வல்லாளபட்டி பேரூராட்சி ஆகிய இடங்களில் அதிமுக கொடியை மேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் ஏற்றிவைத்தாா்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் க.தமிழரசன், மேலூா் ஒன்றிய அதிமுக செயலா் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றிய அதிமுக செயலா் வெற்றிச்செழியன், மதுரை புகா் கிழக்கு மாவட்ட அவைத்தலைவா் எஸ்.என். ராஜேந்திரன், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் கவுசல்யா குலோத்துங்கன் மற்றும் அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா். பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டா்களுக்கும் இனிப்பு வழங்கினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT