மதுரை

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் திடீா் ரத்து

DIN

தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 2) நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

காந்தி ஜயந்தி தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதன்படி, மாநிலம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா தொற்று பரவல் காலமாக இருப்பதால், அனைவரும் முகக் கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டத்துக்கான ஏற்பாடுகள் அந்தந்த ஊராட்சித் தலைவா்களால் செய்யப்பட்டன.

இந்நிலையில், கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊராட்சித் தலைவா்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT