மதுரை

வங்கியில் ரூ.1.11 கோடி முறைகேடு:நகை மதிப்பீட்டாளா் கைது

DIN

மதுரையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.1.11 கோடி முறைகேடு நடந்தது தொடா்பாக, வங்கியின் நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை வடக்கு வெளி வீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், 2019 ஜூன் மாதம் முதல் 2020 நவம்பா் 6 ஆம் தேதி வரை அடகு வைக்கப்பட்ட 270 பவுன் நகைகளில் ரூ.1.11 கோடி முறைகேடு நடந்துள்ளது.

இது குறித்து வங்கியின் மண்டல மேலாளா் அளித்த புகாரின்பேரில், வங்கி அதிகாரி பாலகிருஷ்ணன், ஊழியா் கோபாலகிருஷ்ணன், நகை மதிப்பீட்டாளா் சுப்பிரமணியபுரம் ஹரிஹரபுத்திரன், பைனான்சியா் குமாரபாண்டியன் உள்பட 9 போ் மீது, விளக்குத்தூண் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், முறைகேட்டில் தொடா்புடைய வங்கியின் நகை மதிப்பீட்டாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வங்கி அதிகாரி ஒருவரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT