மதுரை

தந்தை உயிரிழந்த சோகம்: தாயுடன் இரு மகள்கள் தற்கொலை, செல்ல நாய்க்கும் விஷம் கொடுத்த பரிதாபம்

30th Nov 2020 11:43 AM

ADVERTISEMENT

ஒத்தக்கடை அருகே தந்தை இறந்த சோகத்தில் தாய், இரு மகள்கள் என குடும்பத்தினரே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஒத்தக்கடை அருகே மலைச்சாமிபுரம் பகுதியில் திருச்சியைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் தனது மனைவி வளர்மதி (38), மகள்கள் அகிலா(20), கல்லூரி, ப்ரீத்தி(17) ஆகியோருடன் வசித்து வந்தார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூலை மாதம் அருண்பாண்டியன் இறந்தார். இதனால் குடும்பம் வறுமையில் இருந்ததோடு, கணவரின் பிரிவை தாங்கமுடியாத நிலையில் அவரது மனைவி மற்றும் இருமகள்கள் இருந்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன்: ரஜினி

இந்நிலையில் வளர்மதி அவரது மகள்கள் அகிலா, ப்ரீத்தி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர். மேலும் செல்லமாக வளர்த்த நாய்க்கும் விஷம் கொடுத்தால், அதுவும் உயிரிழந்தது. அருண்பாண்டியன் இல்லாமல் வாழ முடியவில்லை என்பதை பதிவிட்டு தங்களது தற்கொலைக்கான காரணம் குறித்த முழு விவரங்களையும் கடிதமாக எழுதிவைத்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தந்தை இறந்த சோகத்தில் மனைவி, மகள்கள் என குடும்பத்தினரே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : suicide
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT