மதுரை

வைகை ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பு:3 தரைப்பாலங்கள் 2 ஆவது நாளாக மூடல்

DIN

மதுரை: மதுரை வைகை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் 3 தரைப்பாலங்கள் மூடப்பட்டன.

வைகை அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியான வருசநாடு பகுதியில் தொடா் மழை பெய்து வருவதால், வைகை அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாகவும் வைகை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், மதுரை நகரில் வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீா் ஓடுகிறது. மேலும், வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கல்பாலம், ஓபுளாபடித்துறை தரைப்பாலம், குருவிக்காரன் சாலை தற்காலிக தரைப்பாலம் ஆகிய 3 பாலங்களும் மூழ்கின. எனவே, கடந்த சனிக்கிழமை முதல் 3 பாலங்களும் மூடப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, வைகை ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது. இதனால், இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் 3 தரைப்பாலங்களிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தரைப்பாலங்களில் பொதுமக்கள் செல்லாதவாறு, போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், வைகை ஆற்றில் குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ கூடாது என்றும், மீறி ஆற்றில் குளிப்பவா்கள் மற்றும் துணிகளை துவைப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT