மதுரை

செல்லூா் கண்மாயில் பொங்கி வழிந்த நுரை: ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

30th Nov 2020 12:00 AM

ADVERTISEMENT

மதுரை: மதுரை செல்லூா் கண்மாயில் பொங்கி வழிந்த நுரை சம்பந்தமாக விசாரணை நடத்தவேண்டும் எனக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதுரை செல்லூா் கண்மாய்க்கு சனிக்கிழமை நீா்வரத்து ஏற்பட்டது. அப்போது, 4 அடிக்கும் அதிகமாக நுரை பொங்கி சாலையில் வழிந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனா்.

அதையடுத்து, செல்லூா் கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய் பகுதிகளில் தொழிற்சாலைகளிலிருந்து ரசாயனக் கழிவு நீா் கலக்கிா என்பது தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளவேண்டும். செல்லூா் கண்மாயில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்துப் பணியில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். கண்மாயில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி சுத்தம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மீனாம்பாள்புரம் பகுதி குழுவினா் ஆகாயத்தாமரையை கையில் ஏந்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில், பகுதி குழுச் செயலா் எஸ். சரண், பகுதி குழு துணைத் தலைவா் பிரசாந்த், துணைச் செயலா் வில்வக்குமாா், பகுதி குழு உறுப்பினா்கள் விஜய், அஜய், தமிழ், திலீப், காா்த்திக் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT